Tuesday, May 15, 2012

மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன






மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று 15ம் திகதி நான்கு மணித்தியாலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை வான் கதவுகள் திறக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதி பணிப்பாளர் எரந்தன ஹெமவர்த்தன தெரிவித்தார். இதனால் கொத்மலை ஓயாவை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் விடுவிக்கப்படாத அதிக நீர் அளவு இன்று விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment