Sandiya's Slidely from Sandiya Alagaraja on Slide.ly.
Tuesday, December 25, 2012
Friday, December 21, 2012
Monday, December 10, 2012
Sunday, November 18, 2012
Tuesday, November 6, 2012
இந்துக்களின் பாரம்பரிய தத்துவத்தை பறைசாற்றும் நல்லூர் கந்த சுவாமி கோவில்
யாழ் மண்ணில் வரலாற்று சிறப்பு மிக்கதும் இந்துமக்கள் மட்டும் அன்றி அனைத்து இன மக்களாலும் வழிப்படப்படும் புனித தளமான நல்லூர் கந்த சுவாமி கோவிலானது யாழ் மண்ணின் கலாச்சாரத்தை மட்டும் அன்றி அதிக உல்லாச பிரயாணிகள் வருகை தரும் உல்லாசத் துறை சார் இடமாகவும் காணப்படுகின்றது . யாழ் நகரிலிருந்து பருத்தி துறை நோக்கி கிலோமீட்டர் பயணிக்கும் போது யாழ் மண்ணின் சின்னமாய்
தலை தூக்கிய கோபுரத்துடன் நல்லூர் கந்தன் கோவில் காணப்படுகின்றது .யாழ்பாண வரலாற்றின் முக்கிய இடமாகவும் இவ் நல்லூர் காணப்படுகின்றமை முக்கிய அம்சமாகும் .அந்தவகையில் 12
ஆம் நூற்றாண்டு தொடக்கம்17 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் யாழ்பாணத்தின் தலை நகரமாகவும் நல்லூர் காணப்பட்டது .யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறதுWednesday, October 24, 2012
கவனிப்பார் அன்றி காணப்படும் யாழின் தொல்பொருள் சின்னங்கள் -யாழ் நூதனசாலை என்றப் பெயரில் காணப்படும் சிறிய குடில் .
யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் பிரதிபலிக்கும் பண்டைய தொல் பொருள் சின்னங்களை பேணி பாது காக்கும் இடமாக காணப்படுகின்றது யாழ் நூதனசாலை . யாழ் நகரிலிருந்து பலாலி நோக்கி கிலோமீற்றர் தூரம் செல்லும் போது நாவலர் வீதியில் கிலோமீட்டர் தூரத்தில் இடது புறத்தில் காணப் படுகின்றது இவ் நூதனசாலை . ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் வீட்டின் ஒரு பகுதி சுவருடன் காணப்படும் சிறிய குடிலே யாழ் நூதன சாலையாக காணப்படுகின்றது.தொல் பொருள் சின்னங்களை பாதுகாப்பது எதிர்கால சந்ததியினர் அது தொடர்பில் தெரிந்துக் கொள்வதற்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதட்குமே ஆகும் . ஆனப் போதிலும் யாழ் மண்ணில் நூதன சாலை ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வியினை கேட்கும் அளவிற்கு காணப்படுகின்றது யாழ் நூதன சாலை. எந்தவித உட்கட்டமைப்பு வசதிகளும் இன்றி அதிகால சுவர்களுடனே இவ் யாழ் நூதன சாலை காணப் படுகின்றது .யாழ் மண்ணின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் முக்கிய ஆவணப் பொருள்கள் மட்டும் பழமை வாய்ந்த பொருட்கள் என்பன இவ் நூதன சாலையில் காணப் பட்டுகின்ரப் போதும் இவ் நூதன சாலை தொடர்பில் எந்த ஒரு அரச நிறுவனங்களோ அரச சார்பற்ற நிறுவனங்களோ எவ் வித நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்பது இவ் நூதனசாலையின் மேற்பார்வையாளரின் கருத்து ஆகும்

இவ் யாழ் நூதன சாலையின் நிலைமை இவ்வாறே இன்னும் சிறிது காலத்துக்கு தொடருமானால் யாழின் தொல் பொருள் சின்னங்களுக்கு யாது நடக்கும் என்று தெரியாத நிலையிலேயே இவ் நூதனசாலை காணப்படுகின்றது .யாழின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பது இலங்கை அரசின் கடமை மட்டும் அல்ல . யாழ் மக்களின் பொறுப்பும் ஆகும். இதேவேளை யாழ் மண்ணுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் கடமையும் கூட . நூதன சாலை என்ற பெயரில் இயங்கும் இவ் சிறு குடில் இவர்களின் பார்வைக்கு எப்போது பட்டு சிறந்த கட்டிடத்துடன் கூடிய நூதன சாலையாக மாறும் என்பது........................????
Wednesday, August 15, 2012
Thursday, August 2, 2012
Wednesday, July 11, 2012
போராட்டங்கள்
மட்டும் வாழ்வானது
உலகமயமாக்கல் நீரோட்டத்தில்
கலந்திட
வழிகள் இருந்தும்
வாய்ப்புகள் கிட்டவில்லை
அன்றும் இன்றும்
அரசியல் தலைமைகள்
இருந்தும்
அடைக்கலம் அற்றவர்களாக
இன்னல் பட்டுகொண்டுருக்கின்றோம்
இன்னல்கள் தகர்த்தி
இதமான வாழ்வுக்காய்
எங்கள்
விடிவுக்கு
ஒளி கொடுக்க வரும்
மெழுகுவர்த்திகளின்
வருகைக்காக
காத்துக்கிடக்கின்றோம்
Tuesday, July 10, 2012
Friday, July 6, 2012
Monday, June 25, 2012
Friday, May 25, 2012
மேல்கொத்மலை நீரணையைச் சூழ தற்காலிக இரும்பு வேலிகள் அமைப்பு தலவாக்கலை நகருக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை நீரணைப் பிரதேசத்தைச் சூழ தற்காலிக இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மேற்படி நீரணைப் பிரதேசம் பாதுகாப்பற்ற வகையில் காணப்படுவது இதேவேளை, இந்த நீரணையில் கடந்த 20ஆம் திகதி சிறுவன் ஒருவன் விழுந்து உயிரிழந்தமையைத் தொடர்ந்து இந்த தற்காலிக இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன
Tuesday, May 22, 2012
Wednesday, May 16, 2012
Tuesday, May 15, 2012
மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று 15ம் திகதி நான்கு மணித்தியாலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை வான் கதவுகள் திறக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதி பணிப்பாளர் எரந்தன ஹெமவர்த்தன தெரிவித்தார். இதனால் கொத்மலை ஓயாவை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் விடுவிக்கப்படாத அதிக நீர் அளவு இன்று விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கு செல்வதுபோல் மலையகத்திற்கும் வாருங்கள் - இந்திய குழுவுக்கு அழைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசியல் பிரதிநிதிகள் மலையகத்திற்கு விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை தரத்தினையும் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை ஒன்றினை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
இது விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கண்காணிக்க விஜயம் செய்திருந்த இந்திய அரசியல் பிரமுகர்களை ஒரு பிரபல மலையகம் சார்ந்த தொழிற்சங்கம் மலையகத்தின் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களுக்கு கூட்டி வந்து மாலை அணிவித்து அனுப்பியது போல் அல்லாமல் இம்முறை அவர்கள் தோட்டப்புறங்களுக்கும் குறிப்பாக நுவரெலிய, மஸ்கெலியா, ஹட்டன் போன்ற தேயிலை தோட்டங்களில் வேலை செய்கின்ற தோட்டங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும்.
இந்தியாவிலிருந்து பெரியங்கங்காணியினரால் அலைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளியினர் இன்னும் லயன் முறையிலேயே வாழ்கின்றனர். இது தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் நேரடியாக சென்று பார்வையிட்டதால் தேயிலை தோட்டங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழர்கள் படும் அவஸ்தையினை புரிந்து கொள்ள முடியும். மாறாக எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல்வாதிகள் சொல்வதையோ கேட்டுக்கொள்வது உண்மைக்கு புறம்பானது என மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)